பொதுநலவாய மாநாடு இன்று லண்டன் நகரில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நடைப்பெறவுள்ளது.
இந்தநிலையில், அதில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா நோக்கி புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார்.
பொதுநலவாய மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்கின்றனர். இந்த மாநாட்டின்போது, ஜனாதிபதி, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உள்ளிட்ட அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.