ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் தீர்மானங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வெளியிடவுள்ளதாக பிரதி அமைச்சர் ஜே.சீ. அலவதுவல தெரிவித்துள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்புக் குழு எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீ ல.சு.கட்சியின் அமைச்சர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டமையே ஐ.தே.க.யின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதப்படுவதற்கு காரணம் எனவும் பிரதி அமைச்சர் அலவதுவல குறிப்பிட்டுள்ளார்.