நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோரவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து இதற்கான தீர்மானம் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதியின் நிலைப்பாடு குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதற்கிடையே ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான முக்கிய அறிவிப்பை ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.