தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களிடம் நேற்றிரவு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இக்கருத்துக்கு மறுப்புத் தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர,
தாங்கள் இப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனேயே ஆகும் எனவும் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.