தென் கொரியாவின் பாப் இசைக்கலைஞர்கள் நடத்திய கச்சேரியை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரசித்து பார்த்தார். அவருடன் அவரது மனைவி, அதிகாரிகள் உள்ளிட்டோரும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர். தலைநகர் பியாங்சங்கின் முக்கிய அரங்கில் இந்த கச்சேரி நடைபெற்றது. கடந்த 10 ஆண்டுகளில் தென் கொரியாவை சேர்ந்த இசைக்குழு வடகொரியாவுக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
அண்மையில் நடந்துமுடிந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனது குழுவை வடகொரியா அனுப்பி வைத்தது. இதில் இசைக்குழுவினரும் அடங்கியிருந்தனர். இதற்க்கு பதில் மரியாதை செய்யும் வகையில் தென்கொரிய இசைக்குழு வடகொரியாவுக்கு சென்றிருக்கிறது. வடகொரியா மற்றும் தென்கொரிய தலைவர்கள் இம்மாத இறுதியில் நேரில் சந்தித்து பேசுவதற்கான முன்னோட்டமாகவும் இது கருதப்படுகிறது.