யாழ்.மாநகர சபைக்குப் புதிய மேயராகத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.
புதிய மேயர் பதவிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆனோல்ர்ட், தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பா மணிவண்ணன், ஈ.பி.டி.பி சார்பாக ரெமிடியஸ் ஆகியோர் முன்மொழியப்பட்டுள்ளனர்.
வாக்கெடுப்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பங்குபற்றியுள்ளனர்.
மேயர் தேர்வில் போட்டியிட்ட ஆனோல்ட் , மணிவண்ணன் , ரெமிடியஸ் ஆகியோரில் மணிவண்ணன் ரெமிடியஸ் ஆகியோர் சமநிலை வாக்குகள் பெற்ற நிலையில் திருவுளச் சீட்டின் மூலம் மணிவண்ணன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக ஆனோல்ட் தெரிவு செய்யப்பட்டார்.
யாழ். மாநகரசபையின் பிரதி மேயர் போட்டி இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் து.ஈசன் தேர்வானார்.
என ஆணையாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.