வடக்கு மாகாணத்தில் வாட்டி வதைக்கும் வறட்சி காரணமாக, 28 ஆயிரத்து 592 குடும்பங்களைச் சேர்ந்த 97 ஆயிரத்து 725 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். இடர்முகாமைத்துவ அமைச்சின் தகவலின் அடிப்படையில், மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகர பிரதேச செயலர் பிரிவில் 8 ஆயிரத்து 33 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 908 பேரும், நானாட்டன் பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 395 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 888 பேரும், முசலி பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 584 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 544 பேரும், மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் 5 ஆயிரத்து 211 குடும்பங்களைச் சேர்ந்த 18 ஆயிரத்து 507 பேரும், மடு பிரதேச செயலர் பிரிவில் 4 ஆயிரத்து 31 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 361 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் 3 ஆயிரத்து 179 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தின் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 159 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.