நாட்டில் பாரியளவில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் வியாபாரம், துப்பாக்கிச் சூழு, கொள்ளைச் சம்பவம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் என்பன அதிகரித்து வரும் ஒரு நிலைமையை காணக்கூடியதாக உள்ளதாகவும், இவற்றை ஒழிப்பதில் பொலிஸாருக்கு பாரிய பொறுப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நடைபெறும் அனைத்துக்கும் கூட்டு எதிர்க் கட்சியின் பால் விரல் நீட்டும் அரசாங்கம், இந்தக் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது, நாடு அராஜக நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையே எடுத்துக் காட்டுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.