பாகிஸ்தான் குடியரசு தினத்தில் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் பிரதம அதிதியாக இன்று (23) கலந்துகொள்ளவுள்ளார்.
பாகிஸ்தான் குடியரசு தினம் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி இஸ்லாமாபாத்தில் மிகப் பிரமாதமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
லாகூர் பிரகடனத்தின் பின்னர் பாகிஸ்தான் சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதை நினைவுகூறும் முகமாக வருடந்தோறும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று (23) காலை 8.55 மணியளவில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான் குடியரசு தின நிகழ்வுகள் மூன்று மணித்தியாலங்களுக்கு இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வுகளில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் அணிவகுப்பு சாகச நிகழ்ச்சிகளும், கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.