அதிமுக, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மீது மக்களவை சபாநாயகரிடம் தெலுங்கு தேசம் கட்சி புகார் அளித்துள்ளது.
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர விடாமல் அவர்கள் தடுப்பதாக புகார் கூறியுள்ளனர். மக்களவையில் கூச்சல், அமளியால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.