எதிர்காலத்தில் பொறுப்புக்களை மென்மேலும் சிறப்பாக நிறைவேற்றி மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக தெரிவான அங்கத்தவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் பத்தாண்டு காலத்திட்டத்தை அமுலாக்க வேண்டும். மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோயை ஒழிப்பதும் அவசியம். தொகுதிவாரியாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் தத்தமது தொகுதிகளில் சிறப்பாக கடமையாற்ற வேண்டுமென பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ரோஸி சேனாநாயக்கவும் இதன்போது உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.