தனது மூன்று பெண்பிள்ளைகளை கௌரவக் கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் நிரந்தர வதிவிட அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வெளியேற்ற உத்தரவு ‘ரூபா யஹ்யா’ என்ற பெண் கியுபெக் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் நடைமுறை படுத்தப்படும் என அவரது வழக்கறிஞர் ஸ்டீபன் ஹேண்ட்பீல்டு (Stephane Handfield) தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை கனடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை விடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
இக்கொலை தொடர்பில் ஷய்னப் 19, ஷகார் 17, மற்றும் கீற்றி 13 ஆகிய மூன்று சகோதரிகள் மற்றும் மொகமட் ஷாவியாவின் மனைவிகளில் ஒருவரான 52வயதுடைய முதல் மனைவி றோனா அமிர் மொகமட் ஆகிய நால்வரினதும் உடல்கள் 2009 யூன் மாதம் கிங்ஸ்ரன், ஒன்ராறியோவில் கால்வாய் ஒன்றிற்குள் காரில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் யஹ்யாவின் கணவன் மொகமட் ஷாவியா மற்றும் மகன் ஹமிட் மூவரும் கொலை குற்றவாளிகள் என 2012ல் பரோலில் வரமுடியாதவாறு 25 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குடும்பத்தின் கட்டுப்பாடுகளை இவர்கள் பின்பற்ற மறுத்ததால் பெண் இவர்களை கொலை செய்தார் என வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் நடத்தை மீதான பொதுவான கட்டுப்பாடு போன்றன காரணமாக தங்களிற்கு ஏற்பட்ட அவமானத்தை சுத்திகரிக்கும் நோக்குடன் கொலை செய்ய வழிவகுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த இக்குடும்பம் மொன்றியலில் வசித்து வந்துள்ள நிலையில் நாடு கடத்தும் உத்தரவானத்து கனடா எல்லைகள் சேவை முகவர்களால் கேட்டு கொள்ளப்பட்டுள்ளதாகவும் யஹ்யா தற்போது எந்த அந்தஸ்தும் இன்றி கியுபெக் சிறையில் உள்ளார் எனவும் தெரிவிக்கபடுகிறது.