அம்பாறை, நற்பிட்டிமுனைச் சந்தியில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் சற்றுப் பதற்ற நிலைமை காணப்பட்டது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்ன.
அங்குள்ள தமிழர் பிரதேசங்களில் சில இளைஞர்கள் கல் வீசிக் குழப்பங்களை ஏற்படுத்தினர் என்று கூறப்படுகின்றது. அதனாலேயே பதற்ற நிலைமை காணப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பகுதிக்கு சிறப்பு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றும் கூறப்படுகின்றது.