பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை (06) சபாநாயகரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோல்வியடையச் செய்ய புலம்பெயர் தமிழர்களினால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு 350 லட்சம் ரூபா வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும், தமிழீழ பிரிவினை அரசியல் அமைப்பை பிரதமரை வைத்து நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.
கடுவெலயில் கூட்டு எதிர்க் கட்சி ஏற்பாடு செய்த பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.