அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 10,013 ஓட்டங்களை குவித்து அதிக ஓட்டங்கள் எடுத்த 13ஆவது அவுஸ்ரேலிய வீரர் என்னும் சாதனையை படைத்துள்ளார்.
தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவிற்கிடையிலான ரெஸ்ட் போட்டி டர்பனில் நடந்து வருகின்றது.
இந்நிலையில் இரண்டாவது இனிங்ஸில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 25ஆவது ஓட்டங்களை கடந்த போது சர்வதேச அரங்கில் பத்தாயிரம் ஓட்டங்களை எட்டினார்.
ஸ்டீவ் ஸ்மித் 62 ரெஸ்ட்ரில் 6151, 108 ஒரு நாள் போட்டியில் 3,431 முப்பது ரி-20 போட்டியில் 431 ஓட்டங்கள் என 10, 013 ஓட்டங்கள் குவித்துள்ளார்.
இதன்மூலம் இந்த மைக்கல்லை எட்டிய 13ஆவது அவுஸ்ரேலிய வீரர் என்னும் பெருமையை ஸ்மீத் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.