இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்னாநயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு அமைச்சராக இவர் செயற்பட்டவராவார். புதிய அமைச்சரவை சீர்திருத்தத்தில் இவருடைய இந்த அமைச்சு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பேராசிரியர் தம்பர அமில தேரர் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இருப்பினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இவருக்கு இந்த அமைச்சை வழங்க வேண்டாம் எதிர்ப்புக்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.