அரசாங்கம் தயாரித்துள்ள நகைச்சுவை நாடகத்தின் ஒரு கட்டமே தற்பொழுது அரங்கேற்றப்பட்டதாகவும் இதன் அடுத்த கட்டம் இன்னும் சில தினங்களில் அரங்கேற்றப்படும் எனவும் இதனைப் பார்க்கும் மக்கள் சிரிப்பார்களா? அல்லது அழுவார்களா? என்பது தெரியாது எனவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
தற்பொழுது நிறைவடைந்த அமைச்சரவை சீர்திருத்த நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த அமைச்சரவை மறுசீரமைப்பின் போது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இடம்பெறவில்லையென்றே நான் கருதுகின்றேன். இவற்றின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது.
இதன்போது, தாங்கள் சொல்லும் மாற்றம் என்பது, பிரதமர் மாற வேண்டும் என்பதனையா குறிப்பிடுகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய போது,
ஆம், அதனை ஒழுங்கான வழியிலோ அல்லது மாற்று வழியின் ஊடாகவோ செய்ய வேண்டும் எனவும் அவர் பதிலளித்தார்.