பொலிவியா நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிவியா நாட்டில் ஆரம்பித்துள்ள மழை காலம் காரணமாக தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகள், குளங்களில் நீர் நிரம்பியுள்ளதால், வீதிகளிலும் வீடுகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது.
இதனால் அன்றாட நாள் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதுடன், தெற்கு பொலிவியாவில் உள்ள அதிகமான நகரங்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்து பாடசாலை கட்டடங்களிலும், பொது அமைப்புக்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் இவ்வாறான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது. மேலும் பாதிப்படைந்த மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.