தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாளை, அ.தி.மு.க.வினர் மிகவும் விமர்சையாக கொண்டாடுகின்றனர். இதனால் அனைத்துப் பகுதிகளிலும் ஜெயலலிதாவின் உருவப்படங்கள்அலங்கரிக்கப்பட்டு, மரியாதை செலுத்தும் நிகழ்வும் இடம்பெறுகின்றது.
குறித்த பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க தலைமைக் காரியாலயத்தில் ஜெயலலிதாவின் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து திறந்து வைக்க இருக்கின்றனர்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் பொருட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு முழுவதிலுமுள்ள அரச வைத்தியசாலைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் வைத்தியசாலைகளில் இலவச மருத்துவ முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ முகாம் சேவை எதிர்வரும் 06ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கின்றது.
மேலும் அம்மா ஸ்கூட்டர் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்படயிருக்கிறது. இதனை பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்து, பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்கி வைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.