அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு டெப் ரக கணனி பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டத்தை ரத்துச் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
டெப் கணனி கொள்வனவு செய்ய அமைச்சு பின்பற்றிய ஒழுங்கு முறையில் உள்ள சிக்கல் நிலைமை அத்திட்டத்தை ரத்துச் செய்வதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் தர வகுப்பில் கல்வி பயிலும் அரச பாடசாலை மாணவர்களுக்கும், உயர் வகுப்பு ஆசிரியர்களுக்கு 2 லட்சம் டெப் கணனி கொள்வனவு செய்யும் திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு முன்னெடுத்த திட்டத்தில் உள்ள சிக்கல் நிலைமையினால் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் நடைமுறைப்படுத்தவிருந்த இத்திட்டம், இவ்வருடம் ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல் தன்மையை அடிப்படையாக வைத்து இதனை ரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த டெப் ரக கணனிகளை கொள்வனவு செய்யவென அரசாங்கம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாவை ஒதுக்கியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.