தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக கந்தையா வாமதேவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தவிசாளராக செல்வரத்தினம் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 4 ஆண்டுகளுக்கும், தவிசாளர், உபதவிசாளர்களாகத் தொடர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபையின் 28 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 ஆசனங்களைக் கைப்பற்றி, அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தனிக் கட்சியாக உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள வலி.மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக தர்மலிங்கம் நடனேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தவிசாளராக வேல்லையா சச்சிதானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 4 ஆண்டுகளுக்கும், தவிசாளர், உபதவிசாளர்களாகத் தொடர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி.மேற்குப் பிரதேச சபையின் 25 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களைக் கைப்பற்றி, அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தனிக் கட்சியாக உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளராக கருணாகரன் தர்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தவிசாளராக தியாகராஜா பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 4 ஆண்டுகளுக்கும், தவிசாளர், உபதவிசாளர்களாகத் தொடர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலி.தெற்குப் பிரதேச சபையின் 30 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைக் கைப்பற்றி, அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தனிக் கட்சியாக உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள வலி.தென்மேற்குப் பிரதேச சபையின் தவிசாளராக அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தவிசாளராக ஆறுமுகம் சின்னையா கணேசவேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 2 ஆண்டுகளுக்கு தவிசாளர், உபதவிசாளர்களாகத் தொடர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுக்களுக்கும் உரிய தவிசாளர் மற்றும் உபதவிசாளர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நேற்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்படவில்லை.
வலி.தெற்கு மேற்குப் பிரதேச சபையின் 28 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 ஆசனங்களைக் கைப்பற்றி, அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தனிக் கட்சியாக உள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள கரவெட்டிப் பிரதேச சபையின் தவிசாளராக முதல் இரண்டு ஆண்டுகளுக்கும் தங்கவேலாயுதம் ஐங்கரனும், மூன்றாவது ஆண்டுக்கு கந்தன் பரஞ்சோதியும், நான்காவது ஆண்டுக்கு கந்தர் பொன்னையாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உப தவிசாளராக முதலாவது ஆண்டுக்கு கந்தர் பொன்னையாவும், இரண்டாவது ஆண்டுக்கு கந்தர் ரத்தினமும், மூன்றாவது ஆண்டுக்கு நாகரத்தினம் மகாதேவனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நான்காவது ஆண்டுக்குரிய உபதவிசாளர் தெரிவு செய்யப்படவில்லை.
கரவெட்டிப் பிரதேச சபையின் 31 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களைக் கைப்பற்றி, அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற தனிக் கட்சியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.