கலப்பு முறையில் நடைபெற்ற முதலாவது உள்ளூராட்சித் தேர்தலில் குலுக்கலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது.
வலி.தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட குப்பிளான் வட்டாரத்தில், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன சம அளவான வாக்குகளைப் பெற்றுக் கொண்டன. இரண்டு கட்சிகளுக்கும் 314 வாக்குகள் கிடைக்கப் பெற்றிருந்தது.
வட்டார வெற்றியாளரைத் தெரிவு செய்வதற்கு எல்லோர் முன்னிலையிலும் குலுக்கல் இடம்பெற்றது. குலுக்கலில், காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.