டுபாய் சர்வதேச பொலிஸாரின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நேற்று (08) தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டுபாய் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸுக்கு எந்தவிதமான அறிவித்தாலும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர நேற்று மாலை (08)தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டு அபுதாபியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு 7 பேர் கொண்ட குழு அபுதாபியை நோக்கி புறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் விமானக் கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.