வவுனியா பம்பைமடுப்பகுதியில் இராணுவத்தினர் சோதனை நிலையமாகப் பயன்படுத்தப்பட்ட தனியார் காணியில் கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சன்னங்கள் இன்று மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காணியின் உரிமையாளரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அங்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் அவற்றை மீட்டனர்.