பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் சுஷ்மிதா சென். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு வெளிவந்த “நோ பிராப்ளம்” என்ற படத்தில் நடித்தார். அதன்பின் சினிமா பக்கம் வரவேயில்லை. இந்நிலையில் மும்பையில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுஷ்மிதாவிடம், நீங்கள் எப்போது மீண்டும் சினிமாவிற்கு வருவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அவர், நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தேவை ஏற்படும் போது நிச்சயம் நடிப்பேன். அப்படி நான் நடிக்கும் படம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். அது ஐந்து பேராக இருக்கலாம் அல்லது ஐந்தாயிரம் பேராக கூட இருக்கலாம், அதுப்பற்றி கவலையில்லை. ரசிகர்களுக்காக படம் பண்ண வேண்டும். அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் நான் மீண்டும் படங்களில் நடிப்பேன் என்றார்.