ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் வேட்பாளராக தனது பெயரை பதிவு செய்தார் விளாடிமிர் புடின்.
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைவதையடுத்து அதிபர் தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடத்திட மத்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
இத்தேர்தலில் மீண்டும் அதிபர் பதவி்க்கு போட்டியிட வேண்டி விளாடிமிர் புடின், மத்திய தேர்தல் ஆணையத்திடம் தனது பெயரை பதிவு செய்தார். புடினை வேட்பாளராக அங்கீகரித்து 3 லட்சத்து 14 ஆயிரத்து837 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.