ஓவியா நடிக்கும் படத்திற்கு சிம்பு இசையமைக்க உள்ளாராம். சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படம் மூலம் இசையமைப்பாளர் அவதாரம் எடுத்தார் சிம்பு. ஓவியா சிம்பு இசையில் மரண மட்டை பாடலை பாடினார்.
அதன் பிறகு சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் காதல் என்றும், ஏன் திருமணமே நடந்துவிட்டது என்றும் செய்திகள் வெளியாகின. காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என்று இருவரும் தெரிவித்தனர். இந்நிலையில் மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் அனிதா தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். அந்த படத்திற்கு சிம்பு தான் இசையமைக்கிறாராம். ஓவியா சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 படத்தில் நடிக்க உள்ளார். சிம்பு மணிரத்னம் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். சிம்பு ஜிம்முக்கு சென்று ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைப்பது மணிரத்னத்தின் படத்திற்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது.