இல்-து-பிரான்சின் எட்டு மாவட்டங்கள் உட்பட, 22 மாவட்டங்களில் «அதியுச்சக் குளிர் எச்சரிக்கை» (Alerte grand froid) வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் பெரும்பாலும் Nord, மற்றும், Rhône பிராந்தியங்களைச் சேர்ந்தவை. இந்த எச்சரிக்கைப் பிரகடணத்தின் மூலம், எற்கனவே உள்ள, தெருவில் வீடற்றவர்களிற்கான 13.000 தங்ககங்களுடன் மேலும் ஆயிரம் தங்ககங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பரிசிற்குள் புதிதாக இணைக்கப்பட்ட 238 இடங்களையும் சேரத்து, இல்-து-பிரான்சிற்குள் மேலதிகமாக 649 இடங்களும், மற்றைய பதினான்கு மாவட்ங்களில் 409 இடங்களும் திறக்கப்பட்டுள்ளன.
இந்தப் புள்ளிவிபரங்கள், பிரான்சின் பிராந்திய ஒருமைப்பாட்டு அமைச்சகத்தின் (Ministère de la Cohésion des Territoires) ஊடக அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
பரிஸ் மற்றும் அதன் அண்மித்த புறநகர்ப் பகுதிகளைத் தவிர்த்து, ஆகிய மாவட்டங்களில் புதிய தங்கங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.