தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் 6 மாத காலத்தில் சீரமைப்பு பணி நடைபெறும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
தீ விபத்து சேத மதிப்புகள் கணக்கிடப்பட்டு சீரமைப்பு பணிகள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கோயில் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் பேச்சுக்கு இடமில்லை எனவும் கூறியுள்ளார்.