2018-19ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான ரயில் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.376 கோடி செலவில் 48 கி.மீ. தூர பெங்களூரு – ஓசூர் இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும் என்றும் பெங்களூரு – ஓசூர் இடையே அதிகமான ரயில்கள் இயக்க இரட்டை ரயில்பாதை வழிவகுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.