பாக். அரசு முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என ஹபீஸ் சையத் சவால் விடுத்துள்ளார்.
2008 மும்பை தாக்குதல் சம்வத்திற்கு மூளையாக செயல்பட்ட ஜமேத் உத் தாவா , லஷ்கரே தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சையத்.2014-ம் ஆண்டு வெளிநாட்டு பயங்கரவாதி என அமெரிக்க அறிவித்துள்ளது. பாக்.கில் கடந்த ஆண்டு நம்பவரில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாலும் கோர்ட் உத்தரவு மூலம் விடுதலை செய்யபட்டார்.
இந்நிலையில் லாகூரில் நடந்த கூட்டத்தில் ஹபீஸ் பேசியது, காஷ்மீருக்கான எனது போராட்டம் தொடரும். போராட்டத்தை நான் நிறுத்த போவதில்லை. பாக். அரசு முடிந்தால் என்னை கைது செய்யட்டும். எங்களை அடக்க நினைத்தால் நாங்கள் இன்னும் வலுப்பெறுவோம் என்றார்.