மன்னார் சிலாவத்துறை கிராமத்துக்குரிய காணியை அக்கிராமத்துக்கும், அரச வனப் பகுதிக்குரிய காணியை வனத்துக்கும் உரித்தாக்கப்பட வேண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மன்னாரில் தெரிவித்தார்.
வனப் பிரதேசத்தின் பிரச்சினையைக் குறிப்பிட்டு அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், அப்பிரச்சினையைத் தீர்ப்பது தற்பொழுது நீதிமன்றத்துக்கே உரியது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மன்னார் முசலி பிரதேச செயலகத்துக்குரிய சிலாவத்துறைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறினார்.
இப்பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் புர்வீகமாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களை இப்பகுதியில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இப்பகுதி மக்கள் யுத்தத்தினால் வெளியேறிச் சென்ற போது இங்கு இருந்த இடங்கள் வயல் வெளிகள் என்பன காடுகளாக மாறியுள்ளன. அப்பகுதிகள் காடுகளுடன் சேர்ந்துள்ளன. கிராமத்தின் ஒரு பகுதியும் காடுகளுடன் இணைந்துள்ளதாகவும் இவற்றுக்கு விரையில் நீதிமன்றம்தான் தீர்ப்புச் சொல்ல வேண்டும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.