மக்கள் விடுதலை முன்னணி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஆட்சியைக் கைப்பற்றும் விதத்தில் அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார்.
கல்கமுவ பஸ்தரிப்பு நிலையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
கடந்த தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் காணப்பட்ட வாக்குப் பலத்தை விட பல மடங்கு வாக்குப் பலத்தை எதிர்வரும் தேர்தலில் ஜே.வி.பி. பெற்றுக் கொள்வது உறுதி. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் ஆட்சியை அமைக்கும் பலம் தமது கட்சிக்கு கிடைக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.