கட்ட பஞ்சாயத்து மூலம் திருமண உறவை பிரிப்பது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கவுரவ கொலை தொடர்பான வழக்கு ஒன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சமூகத்தில் தங்களுக்கு மட்டும் தான் மனசாட்சி இருப்பது போல பாவனை செய்யக்கூடாது என்று கட்ட பஞ்சாயத்து நபர்களை அவர்கள் எச்சரித்தனர்.
கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளில் 3-வது நபர் தலையீடு அவசியம் இல்லை என்றும் பிரச்சனைகளை தீர்க்க சட்டமும், நீதிமன்றங்களும் உள்ளன என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். 3-வது நபர் தலையீடுதான் கவுரக் கொலைகள் நடைபெற வழிவகுக்கிறது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கலப்புமணம் புரிந்த தம்பதிகளே கட்ட பஞ்சாயத்துகளில் இருந்து பாதுகாக்க உள்ள வழிகள் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.