40 லீற்றர் கசிப்புடன் இளவாலையில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இளவாலை பிரான்பற்றில் வீட்டில் வைத்துக் கசிப்புக் காய்ச்சி விற்பனை செய்யப் படுவதாகப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
நேற்று இரவு 9 மணியள வில் வீட்டைப் பொலிஸார் முற்றுகையிட்டனர். அங்கிருந்து 40 லீற்றர் கசிப்பைக் கைப்பற்றினர். 44 வயதான சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்தனர்.