பிரேமம், பிடா, எம்சிஏ படங்களில் நடித்து பிரபலமாகி விட்டவர் சாய் பல்லவி. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள கரு படத்தில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக தமிழில் சூர்யா, தனுஷ் படங்களில் நடிக்கிறார். ஆனால் இந்த படங்களுக்கு முன்னதாக அவர் தெலுங்கில் ஹனு ராகவாபுடி இயக்கும் ரொமான்டிக் படத்தில் நடிக்கிறார்.
அப்படத்தில் நாயகனாக எங்கேயும் எப்போதும் சர்வானந்த் நடிக்கிறார். இந்த படத்திலும் எம்சிஏ படத்தைப்போன்று சாய்பல்லவியின் கேரக்டரை சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளதாம். மேலும், இந்த படத்தின் கதைக்களம் கொல்கத்தாவில் நடப்பது போல் அமைந்துள்ளதால், முதல் கட்ட படப்பிடிப்பை கொல்கட்டா நகரில் தொடங்கியிருக்கிறார்கள். இதையடுத்து மேற்கு வங்காளத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடை பெற உள்ளதாம். அதனால் தற்போது சர்வானந்துடன் ரொமான்ஸ் செய்வதற்காக கொல்கட்டாவில் முகாமிட்டிருக்கிறார் சாய்பல்லவி.