கெளதம்மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் துருவ நட்சத்திரம். ஸ்கெட்ச் படத்தில் விக்ரம் நடிப்பதற்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் கெளதம்மேனன். ஆனால் ஸ்கெட்ச் ரிலீசாகி அதையடுத்து இப்போது சாமி-2வில் அவர் நடித்து வருகிறார். ஆனபோதும், துருவநட்சத்திரம் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.
இந்த நிலையில், துருவநட்சத்திரம் படத்திற்கு அதிக காலநீட்டிப்பு செய்ததால், அந்த படத்தில் நடிக்க பேசியதைவிட கூடுதல் சம்பளத்தை விக்ரம் கேட்டு வருவதாக மீடியாக்களில் ஒரு செய்தி பரவியுள்ளது. ஆனால் கெளதம்மேனன் அதை மறுத்துள்ளார். படப்பிடிப்பு தாமதமான போதும் விக்ரம் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இந்த படத்தில் அவரது உழைப்பு அசாத்தியமானது என்று கூறியுள்ளார்.
மேலும், துருவநட்சத்திரம் படத்தின் டிரெய்லர் இம்மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ள நிலையில், மே 19-ந்தேதி படம் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.