கடந்த வருடங்களை காட்டிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு வரலாறு காணாத அளவு போக்குவரத்து நெரிசல் பரிசுக்குள் குறைந்துள்ளது. இத்தகவல் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ளது.
பரிஸ் நகர் முதல்வர் ஆன் இதால்கோ, உருவக்கிய புதிய போக்குவரத்து கொள்கையின் அடிப்படையிலேயே இது சாத்தியமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2016 ஆம் ஆண்டைக்காட்டிலும், 2017 இல் 4.8 வீத போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 2016 செப்டம்பருடன் ஒப்பிடுகையில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் 10 வீத போக்குவரத்து நெரிசல் குறைந்திருந்தது.
அதேவேளை, வாகன தரிப்பிடங்கள் போதுமானவையாக இருக்கின்றது எனவும், தரிப்பிட கட்டணங்கள் செலுத்தும் வீதமும் அதிகரித்துள்ளதாக ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.