இந்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லடாக்கில் இருக்கும் ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
முன்னதாக நிர்மலா சீதாராமன், உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏர்ஃபீல்ட் என்று கூறப்படும் டௌலட் பெக் ஓல்டிக்கு சென்றார்.
இந்த ஏர்ஃபீல்ட் கிழக்கு லடாக்கில் சுமார் 16,700 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு குளிர் காலத்தின் போது வெப்ப அளவு -55 டிகிரீயைத் தொடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்மலா சீதாராமனின் இந்த விசிட் குறித்து ராணுவ அமைச்சகம், `முன்னர் ராணுவ அமைச்சர் இந்திய – சீன எல்லையில் இருக்கும் ராணுவப் பகுதிக்கு வந்தார். அப்போதும், ராணுவத்தினரின் தயார்நிலை குறித்து விளக்கப்பட்டது.
பின்னர் அவர் டௌலட் பெக் ஓல்டிக்கு சென்று அங்கேயும் ராணுவத்தினரிடம் கலந்துரையாடினார்’ என்று கூறப்பட்டது. நிர்மலா சீதாராமனின் இந்தப் பயணம், மிக கடுமையான சூழலில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வரும் ராணுவத்தினருக்கு உற்சாகம் ஊட்டும் நோக்கில் செய்யப்பட்டது என்று தெரிகிறது.