பா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுப்பதற்கான மணி அடிக்க துவங்கிவிட்டதாக இடைத்தேர்தலில் அகட்சி தோல்வி அடைந்தது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
ராஜஸ்தான்,மேற்குவங்க மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா இடைத்தேர்தல்களி்ல் பா.ஜ. படு தோல்வியை தழுவியது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் திரிணாமுல் காங். இளைஞர் அணி மாநாட்டில் கலந்த கொண்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது,
மத்தியில் ஆளும் பா,ஜ. தாக்கல் செய்த பட்ஜெட் நம்பிக்கையற்ற எதிர்மறையான பட்ஜெட் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகிறது. பா.ஜ. சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் உறுதிபடுத்திவிட்டன.
பா.ஜ.விற்கு பிரியாவிடை கொடுப்பதற்கான மணி அடிக்க துவங்கி விட்டது. 2019- லோக்சபா தேர்தலில் அக்கட்சி காணாமல் போகும். தொலை நோக்கி வைத்து தேடினாலும் சிக்காது என்றார்.