அரியானா மாநிலம் சிர்சாவை சேர்ந்தவர் ராம்ரகீம். இவர் சீக்கியர்களில் ஒரு பிரிவினரின் தலைவராக இருக்கிறார்.
இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்து இரண்டு பெண்களை இவர் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவில் சிபிஐ விசாரணை நடத்தி அவரை கைது செய்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை தொடர்ந்து அவர் ரோதக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டவுடன் அரியானா மாநிலத்தில் வன்முறை பரவியது. இதில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக சாமியார் மீது புது வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சிர்ஸா ஆசிரமத்தில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் 400-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு கட்டாய ஆன்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சி. பி. ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனவும் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கி–்ன் விசாரணை கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த போது சி. பி. ஐ. தனது குற்றப்பத்திரிகையை பிப். 1- 2018-ம் சமர்பிக்க வேண்டும் என சி. பி. ஐ. வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று சாமியார் ராம் ரகீம் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் சாமியாரின் ஆதரவாளர்கள் 400-க்கும் றே்பட்டோருக்கு கட்டாய ஆன்மை நீக்கம் செய்யப்பட்டுள்ளது எனவும், இதில் டாக்டர் பங்கஜ்கார்க், மற்றும் எம். பி. சிங் ஆகிய இருவருக்கு தொடர்பிருப்பதாகவும் கூறுப்பட்டுள்ளது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப். 7-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.