முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
நேற்று (01) கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனைக் கூறியுள்ளார்.
பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமையைப் பறிக்க வேண்டும் என சிபாரிசு செய்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.