ஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் பிலிப்பின் 12 வயது மகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் மாட்ரிக் நகர் ராஜல் பிளாசில் மன்னர் ஆறாம் பிலிப் நேற்றைய தினம் தனது 50 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிறந்ததின கொண்டாட்டத்தில் தனது 12 வயது மகளான லியோனாரை ஸ்பெயின் நாட்டின் அடுத்த இளவரசியாக அறிவித்துள்ளார்.
இளவரசியாக அறிவிக்கப்பட்ட 12 வறது பெண் லியோனாரே எதிர்வரும் காலத்தில் அரசியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இளவரசியாக அறிவிக்கப்பட்ட லியோனாரேக்கு கோல்டன் பிளீஸ் விருதையும் மன்னர் ஆறாம் பிலிப் வழங்கியுள்ளார். 12 வயது சிறுமியான லியானாரே அரசி பதவி வகிப்பதற்கான முதலாவது படியை இவ் இளவரசியாக அறிவித்துள்ளதன் மூலம் பெற்றுள்ளார்.