நேற்று செவ்வாய்க்கிழமை மார்செய் நகரின் நகர மண்டபத்துக்குள் திடீரென நுழைந்த அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பிரான்சின் தேசிய நிதி ஆணையம் இந்த தேடுதல் வேட்டையை முன்னெடுத்தது. அறிவுப்புக்கள் ஏதுமின்றி இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையினால், அன்றைய நாளுக்குரிய பணிகள் பாதிக்கப்பட்டது. பொருளாதார மற்றும் நிதி குற்ற பிரிவு அதிகாரிகளுடன் ஜோந்தாமினர்களும் இந்த பணியை மேற்கொண்டதாக மார்செய் ஜோந்தாமி அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்த மேலதிகள் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பித்த இந்த சோதனை நடவடிக்கை, நண்பகல் தாண்டியும் நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.