மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மிக விரைவில் மீள செயற்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் 1980 களில் நாட்டின் மீன்பிடித் தொழிலுக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய முக்கிய துறைமுக மொன்றாகும். போர் நிலவிய காலப்பகுதியில் துறைமுகம் செயல் இழந்திருந்தது.
குறித்த துறைமுகமானது யாழ்ப்பாண விமான நிலையம் மற்றும் பலாலி இராணுவ முகாம் ஆகியவற்றின் சமீபத்தில் அமைந்துள்ளதன் காரணமாக 1990களில் இருந்து போர் சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. துறைமுகம் மற்றும் அது தொடர்பான 54 ஏக்கர் காணி கடந்த வருடம் ஜூலை மாதம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.
போர் சூழ்நிலை காரணமாக துறைமுகத்தின் இறங்கு தளம், அலைதடுப்பு, இறங்குதுறை (ஜெட்டி) உட்பட துறைமுக படுக்கை, ஐஸ் களஞ்சியசாலை மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையம் என்பன உட்பட கரையோர வசதிகள் சிதை வடைந்துள்ளன.
போருக்கு முன்னர் இத் துறைமுகம் தேசிய மீன் உற்பத்தியில் குறிப் பிடத்தக்க பங்களிப்பை (தேசிய மீன்பிடித்துறையில் 1/3) நல்கியதுடன், ஆயிரத்து 500 குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கியது.
இலங்கையின் பிரசித்தி பெற்ற மீன்பிடித்து றைகங்களுள் இரண்டாம் இடத்தை சுவீக ரித்துக் கொண்ட மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் வடக்கு மாகாணத்தின் பொருளாதார ரீதியாக வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு மைல்கல்லாக கருதப்படுகின்றது.
ஆகவே துறைமுகத்தை மறுசீரமைத்து முழுமையாக செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அலைத்தடுப்பு மறுசீரமைப்பு, நுழைவு கால்வாய் உட்பட துறைமுகப்படுக்கை யினை ஆழப்படுத்துதல், துறைமுக மேடைச் சுவர் மற்றும் வெளிச்சவீடு, ஏல மண்டபம், வலை திருத்தல் மண்டபம், சனசமூக மண்டபம் மற்றும் வியாபார மண்டபம் உட்பட வேறு கரையோரத்தை அண்டிய பிரதேசத்தின் வசதிகளை மேம்படுத்தல், களஞ்சியப்படுத்தல் தாங்கியுடன் எரிபொருள் நிரப்பு நிலையம் மீளமைத்தல், நுழைவுப் பாதைகள், பொது வசதிகள் மற்றும் பிற குறித்த வச திகள் தொடர்பாக அரசால் முதன்மை செயற்றிட்டம் ஒன்றை தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சுடன் கடற் றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கின்றன என தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்ததார் -– என்றுள்ளது.