பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மாயோன் எரிமலை சென்னிற லார்வாக்களை கொட்டி வருகிறது.
அல்பே மாகாணத்தில் உள்ள மாயோன் எரிமலை கடந்த இருவாரங்களாக சீறிக்கொண்டிருக்கிறது.
எரிமலை அதிக அளவிலான லார்வாக்கள் மற்றும் சாம்பலையும் வெளியேற்றி வருகிறது. இன்னும் ஒருசில நாட்களில் எரிமலை வெடித்து சிதறும் என்று அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
7 கிலோமீட்டர் சுற்றளவு அபாயகரமானதாக அறிவிக்கப்பட்டு அங்கு வசித்த 75 ஆயிரம் பேர் அகற்றப்பட்டனர்.
எரிமலை சீற்றம் அதிகரிப்பால் பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த 1814-ம் ஆண்டு மாயோன் எரிமலை வெடித்து சிதறியதில் 2200 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.