பிலிப்பைன்சில் எரிமலை பீதியில் மக்கள் இருக்கும் நேரத்தில், சூறாவளியும், வெள்ளமும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிக அளவில் புகையை வெளிப்படுத்திய மேயான் எரிமலை, தற்போது மக்மா குழம்பை மெல்ல உமிழ்ந்து வருகிறது. இதனால் மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முக்கிய நகரமான லெகாஸ்பியில் சூறாவளி தாக்கியதால் பலத்த மழை பெய்து வருகிறது.எரிமலை காரணமாக 80 ஆயிரம் மக்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில் லெகாஸ்பியில் 2 வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.