கோவாவில் இருந்து உலகை சுற்றி வருவதற்காக பயணத்தை தொடங்கிய இந்திய கடற்படை பெண் அதிகாரிகள் குழுவின் படகு இங்கிலாந்து தீவை அடைந்துள்ளது.
இந்திய கடற்படையை சேர்ந்த 6 பெண் அதிகாரிகள் அடங்கிய குழு பாய்மர படகு மூலமாக உலகை சுற்றி வருவதற்கு திட்டமிட்டனர்.
கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ்வி தாரிணி படகு மூலமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி இந்த சாதனை பயணத்தை கோவாவில் இருந்து தொடங்கினார்கள்.
8 மாதங்களில் உலகை வலம் வருவதற்கும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ஐஎன்எஸ்வி தாரிணி கடந்த வார தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள பல்க்லாந்த் தீவை அடைந்தது. கோவாவில் இருந்து புறப்பட்ட ஐஎன்எஸ்வி தாரிணி ஈகுவேடர், கேப் லியூவின் மற்றும் கேப் ஹார்ட் ஆகியவற்றை கடந்து சுமார் 15 ஆயிரம் கடல் மைல் தூரம் பயணித்து, ஸ்டான்லி துறைமுகத்தை அடைந்துள்ளது. லெப்டினென்ட் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையிலான இந்த குழுவில் லெப்டினென்ட் கமாண்டர்கள் பிரதிபா ஜம்வால், பி.ஸ்வாதி மற்றும் லெப்டினென்ட்ஸ் விஜயா தேவி, ஐஸ்வர்யா மற்றும் பயால் குப்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் வரும் ஏப்ரல் மாதம் பயணத்தை முடித்து கோவா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.