ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் மத்திய செயற்குழு கூடி தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் வினவியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு சந்திரிக்கா குமாரதுங்க போறே கட்சியில் நீண்ட வரலாற்றுப் பின்னணி காணப்படுவதாகவும், அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் கட்சி எடுக்க முன்வராது எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான எஸ்.பீ. திஸாநாயக்க ஊடகங்களிடம் பகிரங்கமாக ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.