நவம்பர் 13 இன் பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலிலும், தலிஸ் தொடருந்தின் தாக்குதலிலும், முக்கிய வழங்கல்களை மேற்கொண்ட பயங்கரவாதி, மொஹமத் பக்காலி (Mohamed Bakkali) இந்த இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களிற்காகவும் பிரான்சில் விசாரணை செய்யப்பட உள்ளார்.
பெல்ஜியத்தினால் பிரான்சிடம் வழங்கப்பட்டுள்ள இந்தப் பயங்கரவாதி, பயங்கரவாதத்தாக்குதல்களில் மக்களைப் படுகொலை செய்தமைக்காகவும், பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்தியங்கியமைக்காகவும் விசாரிக்கப்பட உள்ளார்.
2015 நவம்பர் 13 பயங்கரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டதுடன் 350 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலிஸ் தாக்குதலிலும் மேற்கூறிய குற்றங்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்காலிகச் சிறையில் அடைக்கப்படடிருக்கும் மொஹமத் பக்காலி, பயங்கரவாதத் தடை நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளார்.